மறுக்கவியலாதபடி குவிந்தவைகள்
மாற்றங்களை
நிகழ்த்திக் கொண்டே இருந்தது
கண் முன்னே
யாதொரு தடைகளுமற்று.
அறம் தின்ற மிடுக்கில்
வசீகரித்தது விருப்பங்கள்
தசமக் கணக்குகளை கூட்டியவாறு.
அடிமையாக்கிய
சுவர்ப் பெட்டிகள்
அர்த்த சாமத்திற்கு
முன்பாகவே கூவியது
நீண்ட பேரின்பத்திற்கு
படுக்கையறைக் காட்சிகளைப் பகிர்ந்து.
கையிலிருந்த காதல் வைரி
காண ஏதுவானது
கண்ட குப்பைகளை
மனம் போன போக்கில்
சுய முறுக்கேற்றி.
கம்பூன்றும் கிழவனும்
கால்சட்டைப் பையனும்
புரியாத குழந்தையின்
வெட்கத் தளத்தில் விளையாடினார்கள்
உறுப்பறுக்க முடியாதெனும்
உளவியலில்.
கறையாடையுடுத்தியதை
சீருடையில் மறைத்தார்கள்
சட்ட பரிபாலனக்காரர்கள்
சந்தேகப்படும்படியாகவே
சளைக்காமல்.
சுவீகரித்த குறைச்சிந்தனைகள்
பொதுப்புத்தியில் வியாபித்தது
சுயலாப நோக்கில்
சூறையாடி
விகர்ப்பங்களில்
வீழ்த்தி.
இவ்வாறாகிய பொழுதுகளுக்கிடையில்
வாழும்
சில அறச்சீலர்களின்
பொருட்டால்
நானும் அதுபோல
வாழ ஆசை கொள்கிறேன்
பல அசௌகரியங்களைக் கடந்து
ஆதுரங்கள் மேவ.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.