சரியாக அதே நேரத்துக்கு
எப்படி குரைக்கிறது
கண்டுபிடிக்க வேண்டும்
காரியத்தில் இறங்கினேன்
அதே நேரம் வந்தது
சரியாக அதே குரைப்பு
கண்கள் விரியக் கண்டேன்
அங்கு எந்த நாயும் இல்லை
விழித்துக் கொண்ட போது
நாய் குரைத்த இடத்தில்
நானுமில்லை

*
உளறலும் பிதற்றலும்
உள்ளத்தின் சிடுக்கு
உருக்கொண்ட தவிப்பை
மிகு கனவாக்கும் விடியல்
உண்மைக்கும் உணர்வுக்கும்
உடலே இடைவெளி
மறுபடி தூங்குவதற்குத் தான்
மண்டை தூக்கி நடக்கிறோம்
சொல்லித் தீராத துயர வடும்பே
தினமும் பசியும்
பல்லக்கு பவனிக்கு
காத்திருக்கும் சோகம்
இருகால் கற்பனைக்கு
இட்டுக் கட்டும் யாவும்
தேனீர் தீர்கிறது
சிந்தனையும் தீர்கிறது

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.