எவருமில்லை
இரண்டு பேரைத் தவிர
பேருந்து நிறுத்தத்தில்.

அறிந்த முகமென
தெரிகிறது இருவருக்கும்.
தயக்கம்
தவிர்ப்பது
யாரெனும் தவிப்பில்.

பெரு நகரிலும் இருக்கிறது
விழுங்கி விட்டும்
தொலைக்காத கிராமியம்
அழகென.

சொல்லியிருக்கலாம்
இன்னார்தானே நீங்களென....
உதவிகள் செய்ய வேண்டுமென
அவர் நினைக்கலாமென்ற
நினைவு வராமலிருந்தால்

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.