தலை கீழ் குடையில்
வான நடை இது

வந்தமர்ந்த காகத்தின்
மொழி பெயர்க்க
எப்படி கற்றேன்

நீலமேகம்
வயலெட் வளைவு
பச்சை கண் கொண்டு
கண்டு விட்டேன்

நீந்த மறத்தல் தான்
நியதி போல
நித்திரைக்கு நின் மூச்சு

நேற்றுவரை இப்படியா
நேந்திரம் காய்க்கிறது
என் கொய்யா மரம்

மை டப்பா விலை என்ன
மந்திரவாதி ஆகிடலாம்
உனை நானாக மாற்றி வாசிக்க

மிகக் குறைந்த கனவிலேறி
உன் கதவு தட்டவா
நான் காற்றருவி

கோவாவில் கோவை பூக்கும்
தருணம்
என் ஒருவன் பேரணி இது

சித்திரம் தோற்கும்
நின் சிரிப்பொலி
பூக்கும்

இன்னும் வேறென்ன இருக்கு
இது வெளி வளையும்
கிறுக்கு

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.