பள்ளி மாறுவேடப் போட்டியில்
வெள்ளைப் பட்டாம்பூச்சி
வேடமிட்டு பரிசு ஏதுமின்றி
அம்மாவுடன் TVS50யில்
பெயர் தெரியா சிறுமி
வீடு திரும்புகிறாள்.
என் வாசல் கடக்கையில்
கையசைத்து டா டா காட்டிட
இறுகிய முகம் இளகி
குறுநகைத்து கண்சிமிட்டி
கையசைக்கிறாள்.
சாலையில் உதிர்ந்த பூக்களையும்
அள்ளிக் கொண்டு
மழைக் காற்றும்
அவளைப் பின்தொடர்ந்து பறக்கிறது.
வீதியின் திருப்பத்தைத்
தாண்டுவதற்குள் வந்துவிட்டது
பரிசாய் மழை.
நிலைகுலைந்து தடுமாறி
ஒதுங்குகிறாள் தாய்.
பட்டாம்பூச்சியின் அழகில்
மழை மேகமும்
நிலைகுலைந்திருக்கலாம் தானே?
மேற்கே கைத்தட்டி
இடித்து முழங்கியது வானம்
கூடுதல் மகிழ்வாய்.

- சதீஷ் குமரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.