தான் பகல் முழுதும்
அலைந்து பொறுக்கிய குப்பையை
தலைக்கு வைத்து தூங்குகிறான்.
அவன் வயிற்றில்
உணவான குப்பை
ஆழ்நிலையில் விடும் குறட்டையில்
பேருந்து நிலையம் விழித்தே கிடக்கிறது
உறக்கமின்றி.
தலைமாட்டில் வாலைச் சுருட்டிக்கொண்டு
படுத்துறங்கும் பிறை நிலவின்
நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு,
நீ விடைபெறுகையில் உன்னை
என் மீது ஒட்டிவிட்டது போலவே சிரிக்கிறது.

- சதீஷ் குமரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.