தன்னுள்
கனன்று கனன்று
தகிக்கும் நெருப்பின்
சாயலுனக்கு...

நெருப்பைச்
சுழற்றி சுழற்றி
பரவச் செய்யும்
காற்றின் வேகமெனக்கு.

வேகம்
காட்ட காட்ட
தீரும்.
நின்று
சுழன்றாட
மனம் ஏகும்.

ஈர்க்கும்
மனத்திற்கு
இரும்பென்றும்,
ஈரமென்றும்
தெரிவதேயில்லை.

- இசைமலர்

Pin It