வீசுவது பொறுத்து பறப்பது
மற்றபடி கிடப்பது தான் இருப்பு
கடவுளாவதோ சிற்பமாவதோ
மானுடன் நெய்யும் விதி
உருளுவது புரளுவது தாண்டி
வீட்டுக்கோ ரோட்டுக்கோ வினை
வாசல்படி விஷேசம் என
மண்டையுடைத்தல் கடந்து
பிடித்தது என்னவோ
சிறுமி கையில் மிதக்கும்
அஞ்சங்கல்லாய் தான்

*
தெரு நாய்களை
தெரு நாய்கள் என்றே கடந்து விடுங்கள்
ஐயையோ எங்க சாப்டும் எங்க தூங்கும்
என்று யோசித்து விட்டால்
உள்ளே தொடர் குரைப்பு தான்
சைக்கிளிங் கால்களில் அடங்காது

*

கவிதைகளை எப்படி எழுத வேண்டும்
கவிதைகள் என்றால் என்ன
தவம் செய்து எழுதியது அந்த நாலாவது கவிதை
தானாவே எழுதிக் கொண்டது அந்த கடைசி கவிதை
கவிதை என் ரத்தத்தில் இருக்கிறது
கவிதை என்பது....
இனி அவர் class எடுப்பார்
நாம் glass எடுப்போம்

- கவிஜி

Pin It