சேர்த்து பார்த்து கட்டியபோது
கிடைத்த கொஞ்சம் பரவசத்தையும்
மிஞ்சும் பந்தாவையும்
பக்கத்தில் நின்று பல தோரணைகளில்
தீட்டியதும் உணர்ந்த உற்சாகத்தையும்
நானெனப் பிளந்த ஆணவத்தையும்
நறுக்கென கிள்ளி
மகிழ்ச்சியில் உச்சிதனை முகர வைக்கும்
குழந்தைகளின் சிறுகையால்
அளாவி தூவிய
வண்ணச்சாயம்!

- கலை

Pin It