1.

குப்பையைக் கிளறிவிட்டு
சாணம் தெளித்த
ஈரத் தரையில் குந்தி
மண்ணை இறக்கைகளில் வாரும்
கோழிகளுக்குத் தெரிந்திருக்கிறது
சூட்டைத் தணிப்பது
எப்படியென்று
நாம்தான்
எப்போதும் கற்துகளிலே!

2.

வாய்க்காலில் நகரும்
நத்தைகள் ஒருநாளும்
கூடு நனைந்து போனதற்காக
போக்கிடமில்லையென புலம்பியழுததில்லை
உலா போய்க் கொண்டுதான் இருக்கின்றன...

நல் மண்ணில் வாழும் கரையான்
காற்று மழையில் கரைந்தாலும்
உறைந்து போகவில்லை
விரைந்து கரையெழுப்பி வாழுகிறது ...

வழிகளிருந்தும்
விழிகள்தான் செல்வதில்லை செல்லாதவற்கு!

- கலை

More articles by கலை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.