மனிதன் கொண்டு மனிதம் செய்யும்
வேலை தான் தினமும்
தினம் உண்டு தினம் கொள்ளும்
தூரம் தான் மானுடம்
எட்டிப் பார்த்து ஒளிந்து கவனித்து உற்று நோக்கி
அப்பப்பா சிக்கல் சிணுங்கல் பிக்கல் பிடுங்கல்
சலிப்பற்றது போல நடிக்க
வேண்டும் வேண்டும் வேட்டை மனது
எதையும் தாங்கும் என்பதெல்லாம்
இதயத்தில் ஒழுகும் மூட்டை பயம்
நீ தூக்கவும் முடியாது
நீ சாய்க்கவும் முடியாது என்பதை
JCB ஓட்டுனரிடம் சொல்வது போல
அப்படி ஒரு அபத்தம் உண்டோ
கோட்டுக்கு அந்தப் பக்கம் மூச்சில்லை
கோட்டுக்கு இந்தப் பக்கம் பெரும் நாற்றம்
முடைந்த முன்னேற்பாட்டில்
முட்டி போட்டு முயங்கும்
அடுத்தவன் மீது கொள்ளும் இயல்பான
அன்பு அதிகாரம் Etc...
ட்ரில்லியன் தத்ரூபங்களோடு
செய்து கொண்டிருக்கிறது சுழற்சி
நாக்கு வழிக்கவும் பயன்படாத நான் நான் நான்
ஒவ்வொரு நடையிலும் ஒவ்வொருவரின்
பிணம் காண்கிறேன்
சூடுள்ள பிணங்களுக்கு தின்றது போக
செரித்தது போக இன்னொருவன் தேவை
எப்போதும் முப்போதும் மென்று கொண்டே இருக்க...!

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.