அமர்ந்த நிலையில்
வாசித்துக் கொண்டேயிருக்கும்
அந்தப் பேரறிஞரைச் சுற்றிலும்
அவர் மீதும்
எச்சமிட்டபடியே
கரைகின்றது
இரவும்பகலும்
எண்ணிலடங்கா காக்கைகள், கோட்டான்கள்.
யாவற்றையும் துடைத்து மையாக்கி
தொடர்ந்து எழுதிக் குவிக்கிறார்.
உயிர்மெய் எழுத்துகள்
ஆயுதமாகி ஈட்டியாக முளைத்து நிற்கிறது
வடக்கு நோக்கி
நிலமெங்கும் கூர்முனைகள்.
தரையிறங்க வழியற்று
தலைக்கு மேலே வட்டமடிக்கிறது
பிணந்தின்னி
காவிக் கழுகுகள்.

- சதீஷ் குமரன்

Comments

1 comment

1
neethimalar
sirappu

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.