குமைந்து நிமிரும்
குவளைக் குளிரில் புறுபுறுவென
கொப்புளிக்கத் தோன்றுகிறது
திசை தேடும் தவத்தில்
திரு திருவென விழித்து
திறக்காத பூட்டை திறந்து விடுகிறது
உன் கள்ள உலகம்
என் சாயலில் உன் சரித்திரம் காணுதல்
சாக்கடையில் சாவகாசம் தேடுதல்
கிடைக்கையில் சாதுர்யமெனக் கொண்டதை
கிடைக்காததிலும் ஆதுர்யம் கொள்ள கற்க
உன்னால் முடியாது தம்பி
உயர பறப்பதற்கெல்லாம் உள்ளம்
பெரியதாகாது
உண்மைக்கு மறுமுறை பொய் காணும்
உன் மெய்
அசலுக்கு அத்தியாயங்கள் தேவை இல்லை
போலியின் சுயத்துக்கு அரிப்புகளே மிச்சம்
Mr. இடியட்டுக்கு
மற்றபடி சொல்ல ஒன்றுமில்லை

- கவிஜி

Pin It