மிச்சமிருந்த புலிகளை
விரல்விட்டு எண்ணும்போதும்
பொறுத்திருக்கிறது காடு.

மலஜலம் நிறைந்த
மாநகரக் கழிவுகளோடு
காத்திருக்கிறது கடல்.

நச்சும் நாற்றம் கலந்து
அழுக்கேறிய புகையோடு
நிறைந்திருக்கிறது காற்று.

உடன் வளர்ந்த உயிரை
அடியோடு சாய்க்கும் போதும்
சலனமற்றிருக்கிறது மரம்.

சாயக் கழிவுகளை
கொட்டிக் கலந்த பின்னும்
பயணப்படுகிறது நதி.

மரங்களைத் தகர்த்துவிட்டு
மலைகளை குடைந்த பின்னும்
பெயகிறது மழை.

இயற்கையை நிர்வாணப்படுத்தி
வன்புணர்ச்சி செய்கிறான்,
போதை தலைக்கேறிய மனிதன்.

-பா.சதீஸ் முத்து கோபால் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
Ravikumar T H
This looks good. Keep it up

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.