Great Indian Bustard:

இறக்கைகள் இருந்தும் அதிக எடை காரணமாக பறக்க முடியாத பறவைகள் உண்டு. பறக்கும் தன்மை கொண்ட பறவைகளிலேயே அதிக எடை கொண்ட பறவை இந்த கானமயில். வறண்ட புல் வெளி  பகுதிகளில் வாழ்கின்றன. பொதுவாக ஒரே ஒரு முட்டை மட்டுமே இடுகிறது. 

அதுவும் தரையில் இடுவதால் ஆபத்தும் அதிகம். இதியா மற்றும் பாகிஸ்தானில் இவை அதிகம் காணப்பட்டன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் காணப்பட்ட இந்த கானமயில் இப்போதும் மிக மிக அருகிவிட்டது. தமிழ் நாட்டிலும் இவை காணப்பட்டதுண்டு. வெளி மான்கள் வாழும் நிலப்பரப்பு இவற்றிற்கு ஏற்றதாக இருப்பதால் அங்கு இவை காணப்படுகின்றன. 

அதிக அளவில் இந்த வேட்டயாடப்பட்டதன் விளைவு இன்று இந்த பறவைகளின் எண்ணிக்கை வெறும் 250 என்ற அளவில் குறைந்து விட்டது. மேலும் வருடத்திற்கு ஒரு முட்டை மட்டுமே இடுவதால் இவற்றை காப்பாற்றுவது கடினமாக இருக்கலாம். 

இந்தியாவில் மட்டுமே பார்க்கக்கூடிய எத்தனையோ அரிய உயிரினங்கள் இன்று அழியும் தருவாயில் உள்ளன. இந்த கானமயில்களை பாதுகாக்க சிறப்பு கவனம் எடுத்து அரசு இந்த பறவையை காப்பாற்றவேண்டும்.

Comments

2 comments

2
siraj
நல்ல தகவல்
கி.பிரபா
கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அது போல் தன் சிறகை விரித்து ஆடுமாம் எனப் படித்துள்ளாமே. அவ்வாறெனில் புள்ளிமயில், காட்டு மயில் என்பவை என்ன? ஒரு முட்டையிட்ட பின் அடுத்த முட்டை இடவேயிடாதா? அதன் வாழ்நாளில் ஒரு முறை தான் முட்டையிடுமா? வாழ்நாள் காலம் எவ்வளவு? மனிதர்களைப் பற்றி எண்ணாத அரசை நம்புவதில் பலனும் இல்லை;பயனும் இல்லை.சமூக ஆர்வலர்கள் கூடி செயல்பட வேண்டும்.ஓருயிர் முதல் அனைத்துயிரையும் காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வுடன் வாழ்வைச் சுவைக்க வேண்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.