எல்லாவற்றுக்கும் ஜி ஜி தான் உனக்கு
எதிலிருந்தும் ஜி தான் முளைக்கிறது உனக்கு
எப்போதும் ஜி யில் இருந்து தான்
அப்போதை எடுக்கிறாய்
ஜி தான் சுலபமோ உனக்கு
ஜி தான் அருவமோ உனக்கு
ஜி யைத் தாண்டி சுழலாத கண்களை
மற்ற நேரங்களில் எங்கு வைத்திருப்பாய்
ஜி க்குள் மயிலிறகாய் மறைந்து மினுங்குகிறதா
உன் பதின் பருவத்து புத்தகம்
ஜி யை நிலவுக்குள்ளிருந்து உமிழும்
உன் தனிமை எடை கூடியது நானறிவேன்
ஜி யை ஆற்றிய கோப்பையை கண்ணாடி முன்
நீட்டும் உன் இடைவெளியில் தேநீரா தேவ நீரா
ஜி ஜியாய் டிக் அடிக்கும் உன் கேள்வி பதில்களில்
கோடிட்ட இடம் உன் கரகர ராகத்துக்குத் தானே
ஜி க்கு முன் மிக மிக ரகசியமாய்
வி சேர்த்திப் பார்க்கும் உன் அறை நிலவில்
ஒருபோதும் நான் பகல் சேர்ப்பதில்லை
நம்புவாய் தானே.......!

- கவிஜி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.