Jamia CAB protestவாழும் நிலமும்
குடி உரிமையும்
எங்கள் ஜீவ ஆதாரம்!

இந்திய நாடும்
வங்கக் கடலும்
எங்களைக் காக்கும் கூடாரம்!

அதிகாரத் திமிரில்
ஆவணம் கேட்கும் காவிகளே!
இது எங்கள் நாடென்று
இரத்தத்தில் உள்ளது
வெட்டிப் பாருங்கள் பாவிகளே!

அடக்குமுறையும்
ஒடுக்குமுறையும்
தெறித்து வீழும்
பாருங்கள்!

சிவப்பு பூக்கள்
விரைவில் மலரும்
நாளொன்று வருமே
நம்புங்கள்!

ஒருமுறை தானே
இறப்பு நேரும்
அஞ்ச மாட்டோம்
எதிரிகளே!

தூக்குக் கயிறோ
கொடுமை சிறையோ
துணிந்து நடப்போம்
தோழர்களே!

மனு தர்மம் போற்றி
மக்களைப் பிரித்து
சுரண்டும் நீங்கள்
அட்டைகள் தான்!

மரணம் வரையில்
இங்கே வாழ்வோம்
திப்பு சுல்தான்
பிள்ளைகள் யாம்!

அமைதியின் வழியில் வென்றிடுவோம்
அமைதியின் வழியில் வென்றிடுவோம்

- சுபாஷ், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.