விரிந்த உலக வலையின்
அத்தனை நம்பிக்கைகளும்,
தத்துவங்களும்,
மதங்களும்
சாமானியனுக்கு கைவிரிக்கும்.
அனுதினமும் சாண் எற முழஞ்சறுக்கி
கரையேற்றத்தை கான‌ல் நீராக்கி காக்க வைக்கும்.

வியாபாரிக்கு விலை மதிப்பில்லா
உலோகமோ
பண்டமோ
பத்திரமோ
அடமானத்தின் பிடிமானமே
கஞ்சத்தனத்தை களைக்கும் நம்பிக்கைகளானது.

மோசமான வியாபாரியே
உலோகமற்ற உயிரின்
அடமானத்தில் அவமானம் காண்பான்.

உலக மகாநேயத்தின் மன்னனை
தமிழன் என்றால்
அவனுக்கு பெரும் சக்கரவர்த்தி
வேட்பாளர் என புளகாங்கித்து முழங்கு.

வேதனை தலைகளை அறுத்து
விடுதலையின் கன‌லை
நாடும் கரங்களை கட்டிப்போட
கை விலங்குகள் வேண்டவோ,
நெஞ்சின் வலியை கூவிச்சொல்ல
கிழிந்த வாய்க்கு
பிளாஸ்திரி வேண்டவோ,
அர்த்தங்கள் அழிந்த வாழ்வைத் திறக்க
தூக்குக்கயிறு வேண்டவோ
அரை தசாப்தங்கள் காத்திரு.

உயிரின் மகசூலை
அறுவடை செய்யும் வேதாளத்திற்கு
மானத்தை,
மரியாதையை,
சுயகவுரவத்தை ஒன்று திரட்டி
ஒரேயொரு விரலின் புள்ளியில்
அடமானம் வை.

- தம்பா

Pin It