dog hand shaking

என்ன காரணம்
என்றே தெரியவில்லை
அந்த நாய்க்குட்டியை
எனக்கு மிகவும் பிடித்தது.
என் கரங்களில்
புகுந்த பஞ்சுப்பொதியை
தினம் ரசித்து
பாதுகாத்தேன்
சிரம பரிகாரங்கள்
ராஜ போகமாய்
வளர்ந்தது...
பாசவலையுள்
விழுந்த என்னை
இப்போதெல்லாம் அது
ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.
அலட்சியம் செய்வதோடு
அல்லாமல் தன்
கோர முகத்தை
அவ்வப்போது
காட்டி குரைக்கிறது .
அரவணைப்பு
தேவையாயிருந்தது
யாருக்கு என்று
இறுதிவரை
புலப்படவில்லை...

- அருணா சுப்ரமணியன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.