night 360கழுத்தறுத்து தொங்கிய
வௌவாலின் கனத்த
மௌனமாய் நீள்கிறது
இவ்வெளியெங்கும் முகங்கள்....

ஆதரவற்ற ஒற்றைக்குரலாய்
தடதடத்து தனித்தடங்குகிறது
நடுநிசிகள்......

எப்படி தேடியும்
கிடைக்காத புத்தனை
தேடலுக்குள் அடக்குகிறது
போதி மரக்கிளைகள்......

தீப்பிடித்த வீட்டின் பரபரப்பாய்
கலைந்து, களைத்துப் போகிறது
மடிக்கிடத்தும் தாதிக்களின்
ராத்திரிக் கண்கள்......

நேற்று எறிந்த பிணத்தின்
தீவிரத்தில் இன்றும், இப்போதும் கூட
கசிகிறது
நிலவின் வெம்மைகள்....

- ஆனந்தி ராமகிருஷ்ணன்

More articles by ஆனந்தி ராமகிருஷ்ணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.