புல்லாங்குழலின் துளைகளின்
வழியேயும்
வழியத்தான்செய்கிறது..
கண்ணீர்....

ரயில்பெட்டிகளில்
யாசிக்கும் முதுமை

இதயங்களின் ஓட்டைகளுக்குள்
ஊடுறுவிக் கொண்டிருக்கும்
குற்ற உணர்வுகளுக்கு
இசையென்று பெயரிட்டுக் கொள்ளலாம்

கட்டாயம் சில
சில்லறைகளை வீசி..
அவசர அவசரமாய்
செவிடாகிப்போவோம்.

மீண்டும் ஒரு
பயணத்தில்
ஓசைகளின் அரிதாரத்துடன்
ஊடுறுவும் அக்குழல்கள்..
இதயத்தை
துளையிடுகின்றன

வீசப்படும்
ஒற்றை நாணயத்தால்
அடைப் படுகின்றன
துளைகள்.

- சிந்தா, நெல்லை ஏர்வாடி

More articles by சிந்தா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.