மஞ்சள்
வறண்டு போன சருகுகள்

நீலம்
மேகம் தொலைத்த வானம்

வெள்ளை
செத்துப்போன நத்தைக்கூடு

சிகப்பு
கசாப்புக் கடைக்குப் போன
காளையின் இரத்தம்.

பச்சை
பட்டினி உடம்பில் நெளியும் நரம்பு

கருப்பு
உழவனின் வாழ்வு.

மழை மறுத்த கிராமத்தின்
வானவில்.

Comments

1 comment

1
minbazee
விவசாயி யின் இன்றைய வாழ்கை சுழல் அழகாக வர்ணிக்க ? பட்டுள்ளது
வில்லாக வளைக்க பட்ட விவசாயி யின் முதுகு எழும்பு
வானவில்லின் வர்ணத்தில் தெரிகிறது

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.