என்
பாதங்களடியில்
நசுங்கக் காத்திருந்த
சருகுகள்
அந்தப் பாதையில்
உதிர்த்திருந்தன
என் நிழலோடு
பொருந்தக்கூடிய
முகமற்ற நிழலொன்றினை

என்
ஆடை வழி
வழிந்த நிறங்கள்
நனைத்துக் கொண்டிருந்த
அந்தப்
பாறையின் இடுக்கில்
சிக்கியிருந்தது சிறு பூவொன்று

சிறகிழந்த அந்தப்
பறவையின் கால்களுக்குள்
சிக்குண்டது
என் இமை கிழித்த
சிறு கத்தியில்
வெட்டுப்பட்ட
நிறமற்ற இறகொன்று

என் விரல் நனைத்து
ஊர்ந்து சென்ற
சிறு ஊற்றுக்குள்
நெளிந்து கொண்டிருந்தன
சிறு சிறு
பச்சை வேர்களும்
நெருப்புமிழ்ந்த
சில பாம்புகளும்

சிறு நரியொன்றின்
கால்தடங்கள்
கூட்டிச் சென்ற
அந்த மர வீட்டின் வாயிலில்
எனக்கும் முன்பு
சென்று சேர்ந்த
இரண்டோ மூன்றோ நிழல்கள்

சருகுகள் மூடியிருந்த
அந்தப்
பாதையின் முடிவில்
எரிந்து கொண்டிருந்த
சிறு நெருப்பின் விளிம்பில்
தன்னந்தனியாய்க் கிடந்தது
நிழல் இல்லாத முகமொன்று

- கிருத்திகா தாஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.