Kids friendshipசொற்கள் -
அர்த்தங்கள் தங்கிச்செல்லும்
சத்திரங்கள்..!
நிரந்தர முகவரியல்ல..!

சொற்களின்
மரக்கிளையில்
இளைப்பாறினாலும்..
அர்த்தங்களின் சிறகுகள்
அங்கேயே
கூடுகட்டிக் கொள்வதில்லை..!

சொல்லப்பட்ட
சொற்களில் இருந்து
தேடப்படும் பொருள் எல்லாம்
சொல்லப்படாத..
சொற்களில் மட்டுமே
ஒளிந்திருக்கின்றன..!

அன்பை
மொழிபெயர்க்க முடியாமல்
ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு
அலைகின்றன மதங்கள்..!

மொழிகள் அற்ற
ஓசைகள் அற்ற
மௌனப் பெருவெளியில்
நிறைந்திருக்கும் காதலை..
கல்யாண மேளச்சத்தங்களால்
கண்டுபிடிக்க முடியவில்லை..!.

சிறந்து விளங்கும்
சிற்பங்கள்
மணியோசைகள்
மந்திரங்களுக்கு எல்லாம்
புலப்படாத இறைவனைப்போல்..

உண்மைகள் எப்போதும்
உரத்து பேசப்படும் இடத்தில்
உறைவது இல்லை..!

அறிவியல் ஆய்வகங்களில்
அரிய தகவல்களின் வழியே
மனித மனதைக்
கண்டுபிடிக்கும்
வித்தையை
விஞ்ஞானம் இன்னமும்
கண்டுபிடிக்கவில்லை..!

அதுவரையில் -
எல்லாம் கடந்து
எல்லாம் நிகழ்ந்து
ஏதோ ஒன்றில்
அறியாமையின் பெருவெளியில்
அன்பில் மூழ்கித் திளைக்கலாம்..!

- அமீர் அப்பாஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.