படிக்கிறீர்களோ, இல்லையோ 

பகிர்ந்து விடுங்கள்...

பிடிக்கறதோ இல்லையோ 

லைக்ஸ் போடுங்கள்...

பீப் சாங்கோ பீப் பிரச்சினையோ 

கருத்து சொல்லுங்கள்....

காலை மதியம் இரவு 

என்று சும்மாவாவது 

வந்து போங்கள்...

ரிலீஸ் ஆகும் எல்லாப் படத்தை 

பற்றியும் அப்படி இப்படி என்று 

சொல்லி வையுங்கள்...

தெரிந்து சிக்குபவன்... தெரியாமல் 

சிக்குபவன் 

பாரபட்சமின்றி வாரி விடுங்கள்...

அவ்வப்போது எவருடனாவது 

சண்டையிடுங்கள்...

நண்பனை வெறுப்பேற்ற

அவன் நண்பிக்கு ரிக்வெஸ்ட்

அனுப்புங்கள்...

இவைகளில் எதையாவது 

ஒன்றை செய்து கொண்டே 

இருங்கள்...

மறந்தும் சேர்ந்தாற் போல 

இரண்டு நாட்கள் வராமல் 

இருந்து விடாதீர்கள்...

முதல் முறை நீங்கள் மரணித்து 

விட்டதாக 

நம்பத் தொடங்கி விடும் 

இந்த உலகம்...

- கவிஜி 

படிக்கிறீர்களோ, இல்லையோ 
பகிர்ந்து விடுங்கள்...
பிடிக்கறதோ இல்லையோ 
லைக்ஸ் போடுங்கள்...
பீப் சாங்கோ பீப் பிரச்சினையோ 
கருத்து சொல்லுங்கள்....
காலை மதியம் இரவு 
என்று சும்மாவாவது 
வந்து போங்கள்...
ரிலீஸ் ஆகும் எல்லாப் படத்தை 
பற்றியும் அப்படி இப்படி என்று 
சொல்லி வையுங்கள்...
தெரிந்து சிக்குபவன்... தெரியாமல் 
சிக்குபவன் 
பாரபட்சமின்றி வாரி விடுங்கள்...
அவ்வப்போது எவருடனாவது 
சண்டையிடுங்கள்...
நண்பனை வெறுப்பேற்ற
அவன் நண்பிக்கு ரிக்வெஸ்ட்
அனுப்புங்கள்...
இவைகளில் எதையாவது 
ஒன்றை செய்து கொண்டே 
இருங்கள்...
மறந்தும் சேர்ந்தாற் போல 
இரண்டு நாட்கள் வராமல் 
இருந்து விடாதீர்கள்...
முதல் முறை நீங்கள் மரணித்து 
விட்டதாக 
நம்பத் தொடங்கி விடும் 
இந்த உலகம்...
 
கவிஜி 

Comments

1 comment

1
Surya
Nice :)

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.