அரூபக் குரலோடு
பின் மதியச் சாயல்
மெல்ல நகர்ந்து
வீதி தாண்டி, முகம்
திருப்பி கூன் நடையோடு
மறைந்து விடுகிறது
கிழவியின் திண்ணையில்
கண் அசந்த
அசலூர்க்காரியின் கனவு...

- கவிஜி

Comments

1 comment

1
DEVKUMAR ARUMUGAM
நான்
‘பொய்’ பேசுகிறேன்

உண்மையின்
கானல்நீர்
உன்னுள் வளரும்
உள்ளழுக்கு
உபயோகித்தால்
உனக்கு இழுக்கு
பலருக்கும் பழக்கப்பட்டவன்
உலகின் பெரும்பாண்மை
வாய்மையின் நிழல்
நான்- ‘பொய்’
ஓர் உண்மை பேசுகிறேன்

உண்மையின்
இருப்பில் (Existence )
ஒருபோதும்
நானிருப்பதில்லை
அனைத்தும் உண்மையே !

உண்மை
என் ஆதிமூலம்
வையமுழுதும்
வியாபித்திருப்பவன்

தேனின் இனிப்பு
வேம்பின் கசப்பு
என்னுள் அவனின் இருப்பு
அவனை நம்பியே
என் பிழைப்பு

உண்மை
என் மடியில்
உறங்குவான்
விடிந்ததும்
விழித்துக்கொள்வான்!!
விழித்ததும்
என்னை விட்டுவைப்பதில்லை
வளர்த்தகடா
மார்பில் பாய்ந்திடுவான்

அவன்
ஊமையெனும் வரை
உலகை வலம் வருவேன்
உச்சரிக்க ஆரம்பித்தால்
சுட்டெரிந்து போவேன்

நான்
வாய்மையின்
பரிமாணம் (Dimension)
அவனோ
எனது
பரிணாமம் (Evaluation)

உண்மையில்,
உண்மையின்
உண்மை
உண்மைக்கே
தெரியாது

நான்
ஊற்று
தோண்டதோண்ட
வருவேன்
அவன்
காற்று
எங்கும்
நிறைந்தவன்

நான்
காற்று
எளிதில்
புகுந்துகொள்வேன்
அவன்
ஊற்று
உப்புகரிப்பதில்லை
அவன் நான்
நான் அவன்
ஒன்றென கலந்தவன்

இருள்
இருள்தால்
நிழல் நான்
உண்மையை தொடர்வதில்லை

பொய் – நான் ஒளி
தற்காலிகமானவன்
வாழ்ந்து இறப்பேன்

உண்மை - அவன் இருள்
நிரந்தரமானவன்
இறந்தும் வாழ்வான்

நான்
எளிதில்
புலப்படுவேன்
புரியப்படுவேன்

அவன்
புலப்படுவதறிது
புரியப்படுவதறிது
நான் – ‘ பொய் ‘
உண்மை
சொல்லி
இன்று
புனிதனானேன்

எந்த ஒரு படைப்பும் சுயம்பாய் நிகழ்வதில்லை, ஏதோ படைப்பின் ஓர் ஈர்ப்பின் விளைவாய் அதுசார்ந்து, அதன் தொடராய் அல்லது அதன்சாயலில் உணர்வுக்குட்பட்டவரின் எண்ண பிரதிபலிப்பாய் தான்
மலர இயலும்.

அந்த விதத்தில் கவிக்கோ. அப்துல்ரகுமான் அவர்களின் ‘இது சிறகுகளின் நேரம் தொகுப்பில் ஒரு பகுதி வாசிப்பின் பாதிப்பால் என்றோ விளைந்த எண்ணத்தொகுப்புதான், நான் 'பொய்'பேசுகிறேன்.

கவிக்கோ. அப்துல் ரகுமான் ஐயா அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்

மரபு, அரபு, உருது ,ஹைக்கூ தவிர
அத்தனை தேச கவிதைகளையும்,
கவிஞர்களையும்
எங்களுக்கு
இயல்பாக்கிய
இறை கவிஞன் நீ !
பால்வீதியில்
ஆலாபணை செய்து
எங்கள் ஆத்மாவை
பூபெய்த செய்தாய்!
காக்கைசோறு படைத்து
சிறகுகளின் நேரத்தில்
முட்டைவாசியாக்கினாய்!
ஆறாம் விரலால்
கடவுளின் முகவரிகாட்டிய
காகித பூ கவிஞனே!
உன் பெயர் புனிதபடுத்தபடட்டும் !

அன்புடன்,

தேவ்குமார் ஆறுமுகம்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.