நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
வினைஞர் உயிர்த்தே மலர்தலை உலகம்
மனிதன் வாழப் பொருளை ஈட்டிட
நனிநிலத் தாயுடன் தந்தையாய்ச் சேரும்
உழைப்பின் தலைவனாய் வினைஞர் இருப்பதால்
(உலக உயிர்களைக் காப்பது நெல்லும் நீரும் அன்று. மனிதர்கள் வாழ்வதற்கு வேண்டிய பொருட்களை நிலத் தாயிடம இருந்து உற்பத்தி செய்ய, தந்தையாக இருக்கும் உழைப்பின் தலைவனாக இருக்கும் தொழிலாளர்கள் தான் இவ்வுலகின் உயிராக விளங்குகின்றனர்.)