கீற்றில் தேட...

man 258இடைவிடாமல்
இசைத்துக் கொண்டிருந்த
மனதின் தவளைகளை
தூக்கம் என்றொரு
நீண்ட பாம்பு,
மெல்ல மெல்ல
விழுங்கியது....

இப்போது,
இடைவிடாமல்
இசைத்துக் கொண்டிருப்பது
நெடுங்கனவின்
நாக்கின் விஷம்....

விஷம் பிடித்த
பாம்பின் கழுத்தை
தைத்துக் கொண்டே
தாவுகிறது
மனதிலிருந்து
எட்டிக் குதித்த
தவளைகள்....

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.