man faceநிசப்த இரவை குலைக்கும் அலறலாய்
சொட்டும் துளி நிரப்பும்
தரையாகி
நச நசக்கிறது
இதயம்

காலடி ரேகையின் ஈரக் காட்டில்
தணிவதில்லை
அனல்

என்றோ நாசி தட்டிய வாடை மேல்
காளான் படர

இதழ் வெடிப்புகளின் அகலக் குழிக்குள்
உறங்கும் தழும்புகளுக்கு
தீரா தாகம்

பழக்கிய வார்த்தைகள் ஒவ்வொன்றும்
சல்லடை போர்த்திய குழிக்குள்
தஞ்சம் புகுந்திட

திரட்டி வைத்த 'அத'ற்கு
உயிர்நீர்
தெளித்து செல்கிறாய்

- ப்ரீத்தி ஸ்ரீதரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.