மென்னடி யாட்கள் எங்கும் வலம்வர
வன்னடி யாட்கள் தடுப்போரைக் களைய
தேவை எற்படின் போரையும் திணிக்க
சாவையும் வணிகப் பொருளாய்க் கொண்டு
முற்றுரிமை காக்க ஊடகம் ஆட
வற்றும் உலகில் உந்தன் பிள்ளையாய்
உதித்த புவிவெப்ப உயர்வைக் கண்டும்
மதியின்றி உந்தன் வழியே தொடர்ந்து
உலக அழிவிற்கு வழிகோல லாமோ?

((மன ரீதியான தாக்குதலைத் தொடுக்கும்) மென்மையான (பொருளாதார) அடியாட்கள் எங்கும் வலம் வந்து கொண்டு இருக்க, (அவர்களுடைய மயக்கு மொழிப் பேச்சுக்கு மயங்காது) தடுப்பவர்களை (ஆயுதங்களைத் தாங்கிய) வன்னடியாட்கள் (கொலை செய்து) களைய, இரு வழிகளிலும் வெற்றி அடைய முடியாத போது மரணத்தையும் வணிகப் பொருளாகக் கொண்டு, போரைத் திணிக்க, (முற்றுரிமையை) ஏகாதிபத்தியத்தைக் காக்க ஊடகங்கள் (பொய்ப் பிரச்சாரம் செய்து ) ஆட, வளம் குன்றிக் கொண்டு இருக்கும் உலகில் உந்தன் பிள்ளையாக உதித்து இருக்கும் புவி வெப்ப உயர்வைக் கண்டும் மதியின்றி, தொடர்ந்து உந்தன் வழியிலேயே சென்று உலக அழிவிற்கு வழி கோலலாகுமா?)

- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.