கோடையில் தகிக்கும்
பாலை சுடுமணலாய்
நானும் கிடந்தேன்..!

பருவம் தப்பிய பெருமழையாய்
என்னை நனைத்தாய்..!

பெயரிடப்படாத உறவொன்றின்
நெடுஞ்சாலையில் பயணிக்கிறேன்..
சாலையோர நிழலாக..
நீயே தொடர்கிறாய்..!

மரண தண்டனைக் கைதியை
நீதியின் வாசலில் நிறுத்தி
விசாரிக்கும் வேளை..
கருணையை யாசிக்கும்
கண்களைப் போல..
உன் கண்களை
சந்திக்க மறுக்கிறேன்..!

கணங்களில்..
கடந்து போகும் வாழ்வை
ஏன் ஒரு கணம்
நிறுத்தி வைத்து விட்டாய்..!

சுவாசிப்பதை..
கணக்கில் வைத்துக் கொள்ள
முடியாத உயிரினைப்போல..
உன் உறவின் நீள அகலத்தை
என்னால் நிர்ணயிக்க முடியவில்லை..!

நம்ப மறுக்கும்
சூழலைத் தந்து விட்டு
”நம்பிக்கை” ஒன்று தான்
வாழ்க்கை என்கிறாய்..!

கடவுளைப் போல
கண்களில் படாமல்..
காதல்
வாழ்ந்து கொண்டே இருக்கிறது..!

சாத்தானைப் போல
கேள்வியை முன்னிறுத்திய போதும்
பதிலற்ற மெளனங்களே
பதிலாகத் தொடர்கிறது..!

- அமீர் அப்பாஸ்

Comments

1 comment

1
raji
மயான அமைதி
மந்த சுழ்நிலை
முன்னர்
பின்னே
சுட்ரிலும் அமதி
காட்ரின் குரல் மட்டும் மின் விசிரியால்
காகித உரசல்கலும் சில மானவரால்
விலக்கென்னை கன்கலுடன் சுட்ரியபடி அவர்
மேசையில் கல்வெட்டுகல் பொரித்தபடி நான்
ஆரு ஜன்னல்கல்
பத்து மேசைகல்
எட்டு ஜன்னல் கம்பிகல் யென
அப்பப்பா
கொடிய நரகமியது,
கல்லுரி தேர்வரைகல்!!!!!!!!!!!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.