ஒடுக்கப் பட்ட மக்களின் இடையே
மிடுக்கெனப் பகைமை மிகப்பல உளவே
பார்ப்பனர் சுருட்டும் வாய்ப்புச் சுரண்டலே
கூர்மிகு பகைக்கு உறுகா ரணமென
உணரா தொருவருக் கொருவர் பொருதி
கணக்கில் அடங்காச் சேதம் செய்வதும்
முன்னர் பெற்ற வாய்ப்பையும் இழப்பதும்
சென்னியின் உறுப்பின் பயனிலை தோழா


((தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மத சிறுபான்மையினர் முதலிய) ஒடுக்கப்பட்ட மக்களிடையே வலுவான பகைமைகள் மிகப் பல உள்ளன. (ஆனால்) இது போன்ற கூர்மையான பகைமைகளுக்கு அடிப்படைக் காரணம் (ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய) வாய்ப்புகளைப் பார்ப்பனர்கள் சுரண்டிச் சுருட்டிக் கொள்வது தான் என்பதைப் புரிந்து கொள்ளாமல், ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு, கணக்கில் அடங்காத அளவு சேதம் விளைவித்துக் கொள்வதும், ஏற்கனவே பெற்ற வாய்ப்புகளை இழப்பதும் தலையின் (முக்கிய) உறுப்பான மூளையின் பயன் இல்லை தோழனே.)

- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.