*
நீரலைத் ததும்பும்
நிறப் பிரிகையில் பட்டுத் துள்ளுகிறது
குமிழ் குவியும் என் தருணம்

தளும்ப அசைந்து அசைந்து
நகரும் நதியின் மௌனத்தில்
நீந்திக் கடக்க

அனுப்ப மறுக்கிறாய்
இசைவாக ஒரு நினைவை

*****

-- இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Comments

1 comment

1
Baskaran K
என் முதல் விபத்தின் தடம்.......

குரங்கு பெடல்
அடித்து சைக்கிளோடு
விழுந்து புரண்ட
முதல் விபத்து,
எந்த சாலையில் நினைவில்லை......

முதல் நீச்சலில்
கயிறோடு கட்டிய
அரைஞாண்கயிறு அறுந்து
அச்சத்தில் தத்தளித்த
இரண்டாம் விபத்து
எந்த கிணற்றில் நினைவில்லை.......

நூலோடு வாலறுந்துவிட
என் பிடியிலிருந்து,
தும்பி நழுவிவிட,
விரட்டி பிடிக்கையில்
இடறிவிழுந்து கடைவாய்ப் பல்தொலைத்த
மூன்றாம் விபத்து
அரங்கேறிய சுவரெது, நினைவில்லை......

விபத்தின்
தடங்களையும்,
இடங்களையும்
யாரும் நினைவிற்கொள்ள விழையார்,

ஆனால்,

எப்படியடி
இன்றுவரை மறக்காதிருக்கிறேன்,
உன்னை முதன் முதலாய்
பார்த்த இடத்தை மட்டும்.............

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.