உதிர்ந்து கிடந்த
எழுத்துக்களைப் பரிசீலித்துக்
கொண்டிருந்தேன்...
சலங்கையொலி
தூரத்தில் தொடங்கியிருந்தது..
நாட்டியக்காரி யாரும்
நடக்க வாய்ப்பிலாத
இடமும் பொழுதும் தாண்டி
என் எழுத்துக்களைச்
செல்லம் கொஞ்சவிடாமல்
இம்சித்து நெருங்கியது
அந்த ஒலி...
பூம்பூம் மாடோ, கிருஷ்ணா வேடதாரியோ ...
சுற்றிவளைத்த ஆர்வத்தினால்
வாசல் வந்தபோது
வெறித்த சாலையில்
மணலாவது கொஞ்சம் கிடந்திருக்கலாம்.
 
- உமா மோகன்

Comments

2 comments

2
சோமா
சற்றுக் குழப்பமாய் இருக்கிறது..வெறித்த சிமெண்ட் சாலையில் எதுவுமே வராமல் எங்கிருந்து வந்தது சல் சல் சத்தம்...
se.sujatha
அந்த சலங்கை சத்தம் அடிமன ஆசையின் வெளிப்பாடாக கொள்ளலாமா?சின்ன குதூகலத்தை எதிர்பார்த்து வாசல் வரும் அவளுக்கு ஒரு வெறுமை தான் மிஞ்சுகிறது என்று புரிந்துகொண்டேன்?!!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.