ஒரு சுள்ளிக்கட்டு சுமந்து சென்றாய் நீ.
சிறியதும், பெரியதும், நீளமும், குட்டையுமாய்
அடக்கி மடக்கிக் கட்டி வைத்திருந்த கட்டுமீறி
ஒரு சுள்ளி பாதையில் விழுந்து விட்டது.

பின்னால் வந்த ஒருவன் எடுத்துப்பார்த்தான்.
"கோடு போலிருக்கே...."
இன்னொன்றைத் தேடி வைத்து இணை கோடாக்கினான்.
பக்கத்திலிருந்தவன், கேலிச்சித்திரக்காரன் போல்
ஒரு வளையத்தை மேலே வைத்து,
"தலையும்,கையும்" எனச் சிரித்தான்.
கேட்டுக் கொண்டிருந்த மூன்றாமவன்,
தோதான இன்னும் இரு குச்சியால்
உடல் கொடுக்க, உயிர் கொடுக்க வந்தான் மற்றவன்.
ஆடை ஒருவர் தர,"மூளியாக இருக்காதே" என
ஆபரணம் சூட்டினாள் ஒருத்தி.
பால் பழத்தோடு ஒவ்வொருவர் போஷாக்கு தர,
லாஹிரி வஸ்துக்களோடு சிலர் சந்தித்ததாகவும் கேள்வி!

மறுநாள் நீ திரும்புகையில்
ஒற்றைச் சுள்ளி மோகினி அங்கே உலவுவதாகவும்
சூட்சுமக் கயிற்றின் முனை பிடித்தவாறு
வழிப்போக்கன் வெகுகாலம் முன்பு கடந்துவிட்டதாகவும்
கதைத்துக்கொண்டிருந்தார்கள் .....
உன்னிடமும் சொன்னார்கள் "எச்சரிக்கையாக இருக்கும்படி..."

Comments

2 comments

2
கி.பிரபா
ஒற்றைச் சுள்ளி ஒரு பெண்ணானாள். மோகினியானாள். எவரால் சுள்ளிச் சுள்ளியாக இருக்கும் போது தொடுவாரும் அதன் மேல் படுவாரும் இல்லை அங்கே! பெண்ணாகத் தெரிந்ததும் என்னே! ஒரு மோகம்; பிடிப்பு. புளியமரத்து வேருக்கு வண்ணம் மஞ்சள் எனில் அங்கே ஆண்கள் அயராது அமர்ந்து பேசுவார்களாமே! அது உண்மைதான் போலும். மண்ணுக்கடியில் ஒரு வேர் மஞ்சள் என்றாலே ஆணின் பேச்சு மணிக்கணக்கில் எனில் ஒரு சுள்ளிப் பெண்ணாகத் தெரிந்தால் ........? வியப்புதான். மோகினியாக வலம் வரும்போது வாலிபர் முதல் வயதானவர்கள் வரை மோகம் தான். இது தான் உலகம்.
சோமா
இதை இப்படியும் பார்க்கலாம். ஒழுங்காக குச்சிகளோடு குச்சியாய் போயிருந்தால் இந்தக் குச்சிக்கு கண் காது மூக்கு வைத்து யாரும் பேசியிருக்கமாட்டார்கள். இவர்கள் பேசுவதை பெரிதாக குச்சி நினைத்து தனிமைப்பட்டிருக்காவிட்டால் அது மோகினி உருவம் பெற்றிருக்காது. ஒன்றைப் பெற ஒன்றை இழக்க வேண்டும். கவிதை நன்று உமா மோகன்.

ஆனால் கி.பிரபா அவர்கள் கூறுகிற ஆண்கள் தற்பொழுது இல்லை. ஆண்கள் பாவம். விட்டுவிடுங்கள

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.