ஓரறி வுயிர்முதல் ஐந்தறி வுயிர்வரை
பாரினில் வாழப் பொருளது உண்டு
ஆறாம் அறிவுடை மனிதர் வாழ
மாறா நிபந்தனை உழைப்பு என்பதால்
வினைஞர் இன்றி அமையாது உலகு
ஏய்ப்பவர் மக்களை மேய்த்து வாழ்வதை
மாய்ப்பது என்றே விடுதலை உணர்வுடன்
உறுதியாய் வினைஞர் முனைந்து நின்றால்
நிறுத்தும் விசையோ உலகினில் இல்லை

(மரம், செடி, கொடி முதலான ஓரறிவு உயிரினங்கள் முதல் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் வரை உள்ள உயிரினங்கள் வாழ்வதற்கு இவ்வுலகில் தேவையான பொருட்கள் இயற்கையிலேயே கிடைக்கின்றன. (ஆனால்) ஆறாம் அறிவு படைத்த மனிதர்கள் வாழ்வதற்குத் தேவையான பொருட்களை உழைப்பினால் மட்டுமே பெற முடியும் என்பது (இயற்கையின்) நிரந்தர நிபந்தனையாக  இருப்பதால், வினைஞர் (அதாவது தொழிலாளர்கள்) இல்லாமல் இவ்வுலகம் இயங்க முடியாது. (ஆகவே உழைக்காமல்) ஏய்க்கும் கூட்டம் மக்கள் மீது அதிகாரம் செய்யும் கொடுஞ் செயலை, ஒழித்தே தீருவது என்று தொழிலாளி வர்க்கத்தினர் சதந்திர உணர்வு கொண்டு உறுதியாக முயன்றால், அதனைத் தடுக்கும் விசை இவ்வுலகத்தில் இல்லை.)

- இராமியா

Comments

1 comment

1
கி.பிரபா
நாம் ஏமாளிகளாக இருப்பதனால் தானே ஏய்க்கும் கூட்டம் பெருகி விட்டது. நாம் உழைத்தால் மட்டும் போதாது. உழைக்கும் மக்களில் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் தவறியதால் வந்த வினையை நுகர்ந்துக் கொண்டிருக்கிறோம். இனியாவது அயல்நாட்டிற்கு அடிமை ஆகாமல் நம் உழைப்பை நம் நாட்டில் கொண்டாடுவோம். எண்ணத்திற்கு அடிமை இல்லாமல் வெள்ளை வண்ணத்திற்கு அடிமை ஆனதால் இன்று கருப்பர்களான நாம் அடிமையாக வாழ்கின்றோம். விரட்டி அடிப்போம்! வெள்ளைத்தோல் உள்ள வஞ்சகர்களை. தூக்கி எறிவோம் நம் தொண்டை நெறிப்பவர்களை. கருணா ஒரு தெலுங்கன். அண்ணாவும் அப்படியே! செயா கன்னடம். இராமச்சந்திரன் மலையாளி. அட முட்டாள்களா! இனியாவது நம்மவரை ஆள்வதற்கு நம்மவரைத் தேர்ந்தெடுப்போமே!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.