மெளனமாய்
தன்னை மறைத்து
வாழ்ந்த மனிதன்
மெளனம் போல்
சொற்கள் இன்றி
மறைந்து போனான்..!

பற்றுக்கு இடம் கொடுத்து
வாழும் உலகில்
புற்றுக்கு இடம் கொடுத்து
போய் சேர்ந்தான்..!

காவியம் போல் வளர்ந்து வரும்
கருத்தோவியன்
வழியிலேயே முடிந்து விட்ட
சிறுகதையானான்..!

ஆயிரம் கனவுகளுடன்
வாழ்ந்த மனிதன்
ஒரு அதிகாலைக் கனவைப் போல்
முடிந்து போனான்..!

அதிகாலை என்பது
ஒரு நாளின் தொடக்கம்..!
அது தொடங்கும் வேளை
முடிந்து போனான்
அதிகாலை மரணம்..!

முடிவற்ற அன்பே..!
உனக்கொரு முடிவு நாளா?

முடியாது
உன் நினைவு எப்போதும்..!

விடியாது இனிமேல்
எந்நாளும் எனக்கு..!

(தனது 28 வது வயதில், சமீபத்தில் புற்றுநோயால் மரணமடைந்த போடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கவிஞர் மகா.ராசாவுக்கு நினைவஞ்சலி)

Comments

2 comments

2
கி.பிரபா
கனவுகளின் மரணம்.நினைவுகள் மறக்கும்போதுதான்.எங்கோ சிக்கல்! ஏன் சிக்கல் தெரியவில்லை? உரையாடலிலா? உணர்த்துவதிலா? சிந்தித்தால் விடையில்லை. மனம் வலிக்கிறது. நெஞ்சு வலி எனில் மருத்துவமுண்டு. மனவலிக்கு? நட்பு இழக்கும்போது,அதுவாகவே இழந்தபோது ஓர் வலி,உணர்ந்தவர்கள் நொடிக்கு நொடி உள்ளத்தில் அழுவார்கள்.அந்தப்பட்டியலில் சேரவா? அதற்கும் மனமில்லை;ஏன்? அறியாதவர்கள் அருமை புரியாதவர்கள் இடையில் வாழ்வதால்தான்! இழந்தது ஒருநாள் வரும்;பெறமுடியும்.வாழ்வில் வட்டம் பெருகும்.
சோமா
போடியைச் சுற்றிலும் நிறைய கவிஞர்கள் உருவெடுக்கிறார்கள். அமீர் அப்பாஸ் சொல்வது போல் யாரும் அறியாதவாறு ஒரு கவி வாழ்க்கையை வாழ்ந்து விட்டு விரைவிலேயே பூரணத்துவம் பெற்றுவிடுவார்கள் போலும்....வறுமையும் சாவும் இளம் கவிகளுக்கானவையென எழுதப்பட்டவிதி போலும்...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.