ஆறடி ஆழம் குழி எடுத்து
வச்ச தென்னை  உனை
ஆறு மணி நேரம் அடிச்ச
'தானே' புயல் அடியோடு சாச்சிடுச்சி

தென்றலோடு தலை அசைத்து
சலசலவென நீ எழுப்பும் ஓசைய
மெய்மறந்து ரசிச்சிருக்கேன்  

களைப்பாக நானிருந்தா இளைப்பாற
குலைகுலையா இளநீரும் தந்திருக்க

உன் காய்ந்து விழும் பாளையில
கப்பலுந்தா செயிஞ்சி விட்டுருக்கேன்  

பங்குனி உத்திரம்னா என் பாட்டன்
காவடிக்கு உன் குருத்தோலை
பூ வெட்டி கட்டிஇருக்கேன்

நீ கொடுத்த தேங்காய காயவச்சு
எண்ணெய் ஆடி தலையில தேச்சிருக்கேன்

அத்தனையும் தந்த உன்ன பார்க்க
வீசும் காத்து நிக்குமுன்னே
கொட்டும் மழையில குடைபிடித்து
ஓடிவந்தும் உனைகாக்க முடியலையே

ஆனா! காத்துல சாயும் போதும்
ஓடிவந்த எனக்காக
நாலுகுளை இளநீர
களைப்பாற விட்டுசென்ற
உன பார்த்து கண்கலங்கி நிக்கிறனே.

வான் தொடும் தூரத்துல
நீ இருந்தா நாஏரிவந்து
இளநீரு பறிக்க கடினமுனு
இன்று மண்மீது சாஞ்சிட்டியோ!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.