அம்பலமான துரோகத்திற்கு
அப்புறமும் நீ வருகிறாய்
பூங்கொத்தைப் போல
புன்னகையை நீட்டிக்கொண்டு
கழற்றி மாட்டவியலா
ஒற்றை நிர்வாண ஆடையுடன்
நிற்கிறேன் நான்
 
வற்புறுத்தும்  குழந்தையின்
எச்சில் சாக்லேட்டை
மென்று விழுங்கும் மதுமேகக்காரனின்
மறுக்கவியலா ருசிப்பிற்குள்ளும்
தடுக்குறலுக்கான
குழிகளைத்  தோண்டிவிட்டு
நீ செல்லும் வழிஎதிரே
 
பாதங்களில் தைத்த முட்களை
பிடுங்கி எறிந்துவிட்டு சேகரித்த
பூக்களைக் சூடி வருகிறாள்
என்னைப் போலொருத்தி .

Comments

2 comments

2
சோமா
எளிய மொழியில் நல்ல கருத்தாழத்தைச் சாதாரணமாய் சொல்லி நகர்ந்திருகக்கிறீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.
yugayugan
நன்றி நண்பரே

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.