இன்றோ 
நாளையோ
அல்லது எந்தக் கணத்திலும்
நான் கொல்லப்படலாம்
ஓர் அற்பக் காரணத்திற்காக.

ஒவ்வொரு நாளின்
விடியலிலும்
செல்ஃபோனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.கள்
நடுக்கமுறச் செய்கின்றன
என்னை.

புதிய தொழில்நுட்பங்களுடன்
கொல்லும் கலையை,
கொல்லும் நேர்த்தியை
எடுத்துரைக்கிறாய்
தேர்ந்த கலைஞனின் லாவகத்தோடு.

கனவுகளில்
மையம் கொள்கின்றன
என் கொலைக் காட்சிகள்.

அத்தனை இலகுவாய்
நேர்ந்துவிடக் கூடாது
என் மரணம்.

வாழ்தலின் மர்மம்
புரியத் தொடங்கிய தருணத்தில்
உன்னைக் கொல்லத்
துணிந்துவிட்டேன்.

நான் செய்யும் கொலை
என் வாழ்தலுக்கானது.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.