நான் பைத்தியம் ஆக்கப்பட்டிருக்கிறேன்
உன்னால்.
கடற்கரையில் பிரதான சாலைகளிலோ
நேருவீதியின் கடைகள் அடர்ந்த சாலையிலே
சுற்றித் திரியவில்லை.
வாரி முடியப்படாத
ஷாம்பு வாசம் வீசாத
சடை பிடித்த தலைமயிருடன்
கிழிந்த சட்டை அணிந்து
அங்கங்கள் வெளித்தெரியும்படி
நடந்து சென்று
கடைகளின் முன் நிற்கவில்லை.
மார்க்கெட் அருகில்
அழுகிய காய்கறிகளைக் கொட்டும்
குப்பைத் தொட்டிக்கு அருகில் அமர்ந்து
போவோர் வருவோரைப்
புரியாத மொழியில் வசை பாடி
உளறிக் கொண்டிருக்கவில்லை.
அஜந்தா சிக்னலின் ஓரத்தில்
குப்பைகள் அடங்கிய
பெரும் மூட்டை ஒன்றை
யேசுவின் சிலுவையைப் போல
சுமந்துகொண்டு இலக்கற்ற பாதையில்
என் பயணத்தைச் சாத்தியப்படுத்தவில்லை.
இருந்தும்
நான் பைத்தியம் ஆக்கப்பட்டிருக்கிறேன்.
நன்கு விவாதிக்கப்பட்ட அறிக்கையைப் போல
நான் பைத்தியமாக்கப்பட்டதாக
ஆயிரம் முறை நீ
உரத்துச் சொன்ன போது
நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன்
வலிகளை எழுதிக் குவிக்கும்
பைத்தியக்காரி நான் என்று.

Comments

8 comments

8
umamohan
வாழ்த்துக்கள் மனுஷி
மனுஷி
நன்றி
mohan
Nice kavithai...
சோமா
வலிகளைக் கூட வருடும் சொற்களில் சொல்லும் லாவகம் பெண்களுக்கே உரித்தாகிறது. ஆழமான கவிதை. எழுத முயன்று தோற்றுப் போகிறோம் நாங்கள்.
Guest
நல்ல கவிதை
kamalini
அழகான கவிதை யதார்த்தத்தை எழிமையாக வடித்திருக்கிரீர்கல
மனுஷி
கவிதை குறித்த பகிர்வுகளுக்கு நன்றி
கி.பிரபா
யார் பைத்தியம்! புரியாத பருவத்தில் புரியவேண்டியதைப் புரியாமல் புரிந்ததுபோல் வாழ்வெனில் பைத்தியமே பைத்தியம் தான்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.