பயணிக்கும் பாதையோரம்
கைகாட்டி உதவி கோரும்
சிறுவர்களை
என் இருசக்கர வாகனத்தில்
ஏற்றிச் சென்றதில்லை..!
 
வீதியோரம் பசியோடு
மயங்கித் திரியும் மூதாட்டியின்
பசி தீர்க்க முயன்றதில்லை..!
 
சாலையோரம்
அடிபட்ட மனிதனின்
உயிர்கசிய மன்றாடும்
துயரம் தீர்க்க
எப்போதும் துணிந்ததில்லை..!
 
வீழ்ந்திட்ட சக மனிதன்
விழியோடு விழிநோக்கி
நலம் விசாரிக்கும்
நற்பண்பு எனக்கில்லை.!
 
ஆனாலும் நான்
அலுத்து கொள்கிறேன்
எவனுக்கும் இங்கே
மனிதநேயம் இல்லையென்று..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
Vannai Abu
அருமையான வரிகள் கவிஞர் அமீர் அவர்களே
ஜோ.தமிழ்ச்செல்வன்
நல்ல அருமையான செய்தி. பிறருக்கு உதவிட மனமின்றி, இறைவனின் உதவியை தனக்காக நாடுவது நியாயமில்லை; அதனால் பலனுமில்லை. தாகமாயிருந்தேன்; தண்ணீர் தந்தாயா, உணவின்றி இருந்தேன்; உணவு தந்தாயா, உடையின்றி இருந்தேன்; உடை தந்தாயா என இறைவன் மறுமை காலத்தில் நினைத்துப் பார்ப்பதில்லை. இதனால் பெரும்பாலன பிரார்த்தனைகள் வீணாகவே போகின்றன.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.