பாவ மூட்டைகள்
சிலுவையுறு கொண்டு
தேவன் தோளேற்றப்பட்டது
அவன் சிந்திய இரத்தத்தில்
குளித்து வெண்மை
தறித்தன பாவங்கள்.
விலா எழும்பு முறித்து
சிலுவை இழுத்து வரப்பட்டது
ஆணி கொண்டு அறைகையில்
பாவங்களைச் சுமந்து
குறுகி நின்றான் தேவன்
எங்கும் நிமிர்ந்து நிற்கின்றன
சிலுவைகள்

- சோமா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
ஜோ.தமிழ்ச்செல்வன்
உங்கள் கவிதையில் நிறைய கருத்துப் பிழைகள் இருக்கின்றன. இயேசுவை தேவனான சித்தரிப்பது அறியாமை. இயேசுவிடம் ஒருவர் வந்து, நல்ல போதகரே நான் உம்மை பின்பற்ற விரும்புகிறேன் என்கிறார். அதற்கு இயேசு, என்னை ஏன் நல்லவர் என்றாய். இறைவன் ஒருவனே நல்லவர் என்கிறார். உண்மை இவ்வாறு இருக்கையில் இயேசுவை தேவனாக சித்தரிப்பது கருவின் குற்றம். அவரது இரத்தத்தால் பாவங்கள் தறித்தன என்றால், நான் இரண்டு பெண்களை கற்பழித்திருக்கிறேன். மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். நான் சொர்க்கம் சென்றுவிடுவேனா? தவறான பாதையினை மக்களுக்கு காட்டாதீர்கள்.
சோமா
தமிழ்ச்செல்வன்...தாங்கள் தவறுதலாக அற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். தங்களுடைய கருத்தைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன். பாவங்களின் பெயரைச் சுமந்து கொண்டு அவனும் அவன் இருப்பதால் பாவமும் வாழ்ந்து கொண்டிருப்பதாய் சொல்லியிருக்கிறேன். மீண்டும் ஒரு முறைப் படித்துப் பாருங்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.