*
மீட்டுத் தருவதாக சொல்லி நின்ற
நிமிடம்
உன்னுடையதாக இல்லை

ஒரு
தலைக்குனிவின் மூலம்
வேர் விடுகிறது அவமானம்

பூர்த்தி செய்யப்பட்ட வார்த்தைகள்
அளிக்கும் நம்பிக்கைகளை
நொறுங்கச் செய்கிறது
நம்பத் தகுந்த ஒரு
புறக்கணிப்பு

பெருந் துயரத்திலிருந்து
மீட்பதாக சொல்லிச் செல்லும் நிமிடம்
தூவிச் செல்கிறது மேலும்
யாருடையதென்று உறுதி செய்யமுடியாத
வார்த்தைகளை

*****
--இளங்கோ ( இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். )

Comments

2 comments

2
கி.பிரபா
நம்ப வைத்துக் கெடுப்பவன் நஞ்சைக் காட்டிலும் கொடியவனே. கொண்டபின் ஆராயாதே; கொடுத்தபின் பேசாதே என்பது முன்னோர் மொழி.
Elango
பெருந்துயரம் என்பதை எதிர்க்கொள்பவனே அதிர்ச்சியோடு அதைச் சந்திக்க நேர்கிறது.
நிகழ்த்துபவனோ முன்னெப்போதோ திட்டமிட்டு விடுகிறான்..

நன்றி..!
கி. பிரபா

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.