நம் வீட்டுக்குள்

சமையலறையே வேண்டாம்

புகையில் கூட நீ

கண் கசக்கக் கூடாது

உனக்குப் பசிக்கும்தான்

கரும்புக் காட்டுக்குள்ளிருக்கும்

காற்று இனிப்பதில்லையென்ற

கூற்றைப் பொய்யாக்குவது போல

பாச வார்த்தைகளை

காதல் பார்வைகளை

நேசச் சுவைகளை

அன்பின் மனதில் போட்டுப் பிசைந்துருட்டி

ஊட்டி விடுகிறேன்

நீ பசியாறு

அது பார்த்தென் பசியுமாறும்

**

வரைபடங்களில்லா

காலத்தின் பயணங்களில்

பற்கள் கூசக் கடித்திடும்

பிஞ்சு மாங்காயினைப் போல

என் வாழ்வின்

சுவாரஸ்யமான உன்னை விட்டு

நிழற்படங்களின் அசையா உருவங்கள் போல

நீயும் காதலுமின்றி

நானெப்படி வாழமுடியும்

- எம்.ரிஷான் ஷெரீப்

Comments

1 comment

1
ப்ரியா
தை மகளே ..!!!!!!!!!! உன்னை தை திங்கள் என்பதா ....?
தமிழர் திருநாள் என்பதா .....? பொங்கல் என்பதா....?
புவி போற்றும் சூரியனுக்கு ஒரு நாள் என்பதா....?
சித்திரையை வென்று பெற்றுவிட்டாய்
தமிழ் புத்தாண்டை ...!!!!!!!!!!!!
தமிழனுக்கு ஒரு நாள் அது தை திருநாள் ....!!!
நீ பிறந்து விட்டாய் ..!!!!!!!!!! வழிகள் பிறக்க
வாழ்த்துகிறேன் ..!!!!! வாழ்த்த வயதில்லை
எனக்கு...... வணங்குகிறேன் உன்னை ...!!!!!!!!!!!!
என் தமிழ் அன்னைக்கு ... தமிழ் மகளின்
சிறு சமர்ப்பணம் இக்கவிதை .............
வளர்க தமிழ் ..... வாழ்க
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...!!!!!!!!

-- ப்ரியா

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.