இது என்ன விசித்திரமான தேசம்
கைக் குழந்தைகள் தவிர்த்து
ஆண் வாடையேதுமில்லை
எல்லோருமே பெண்கள்
வயதானவர்கள்
நடுத்தர வயதுடையோர்
யுவதிகள்
எல்லோருமே பெண்கள்

விழிகளில் வியப்பைத்தேக்கிய நண்பா!
பாழ்பட்டுச் சிதைந்து வெறுமையான
இவ் விசித்திர நகரில்
எஞ்சியுள்ள
எல்லோருமே விதவைகள்

எமக்கெனவிருந்த கணவர்களைத் தந்தையரைச்
சகோதரரைப் புத்திரர்களை
சீருடை அணிவித்து
வீரப் பெயர்கள் சூட்டி
மரியாதை வேட்டுக்களின் மத்தியில்
புதைத்திட்டோம்
செத்துப்போனவர்களாக

மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

Comments

1 comment

1
Guest
ரிஷான் ஷெரீப் அவர்களுக்கு , வணக்கம் !!

போரின் வேதனையை சுமந்து நின்ற கவிதை..

மொழி பெயர்ப்புக்கும், பகிர்வுக்கும் நன்றி .

இந்த மொழி பெயர்ப்பை படிக்கும் கால்

மனதில் தோன்றிய சந்தேகம்.

எமக்கென்று இருந்த "கணவர்களை, தந்தையர்களை "

எமக்கு என்பது ஒருமையை குறிக்குமாறும்,

கணவர்களும், தந்தையர்களும் என்பது பன்மையாகவும் தோன்றுகிறது.

மாறாக

எமக்கென்று இருந்த கணவனை, தந்தையை,

சகோதரர்களை, பிள்ளைகளை என்பது சரியா ?!

-அவரைப்பூ

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.