யாருமற்ற தனிமையில்..
பூட்டப்பட்ட வீடுகள்
துயரத்தை வெளிப்படுத்த
துர்வாடை வீசுகின்றன..!

அறைகளின் சுவாசத்தை மறுத்து
அடைத்து வைக்கப்பட்ட ஜன்னல்கள்
தூசிகளை சுவாசிக்கின்றன..!

தூசிகள்-
காற்றின் வருகையை
அறிவிக்கும்
நினைவுத்தடங்கள்..!

வசிப்பிடம் அற்றவர்களின்
பெருமூச்சு
அங்கே உறங்குகின்றன..!

சில நேரங்களில்
உறங்க மறுத்து
ஆவியைப் போல அலைகின்றன..!

குழந்தைகளின் சப்தம் கேட்டு
குதூகலிக்கும் சுவர்கள்

அவர்கள் வெளியூர் செல்ல
நேர்கிற போதேல்லாம்..
தன்னை
சமாதியாக உணருகின்றன..!

Comments

4 comments

4
aathmaarthi
ஆகச் சிறந்த பதிவு.நல்ல பார்வை.
..................................................................
குழந்தைகளின் சப்தம் கேட்டு
குதூகலிக்கும் சுவர்கள்

அவர்கள் வெளியூர் செல்ல
நேர்கிற போதேல்லாம்..
தன்னை
சமாதியாக உணருகின்றன..!
..........................................................................
கவிதைக்குள் கவிதையாக இவ்வரிகள் மனது பிசைகின்றன
வாழ்த்துக்கள் கவிஞர்.அப்பாஸ்!
மால்கம் X இராசகம்பீரத்தான்
கடற்கரையின் மனலிலும், பூட்டிய பெரும் வணிக வளாகத்தின் இருள் சூழ்ந்த படிகட்டுகளிலும் படுத்துறங்கும் உலகமயமாதலினால் விரட்டப்பட்டவர்களின் பெரு மூச்சினை இந்த வரிகளில் உணர்ந்தேன்

”வசிப்பிடம் அற்றவர்களின்
பெருமூச்சு
அங்கே உறங்குகின்றன..!”
rajesh kannan
ARPUDAMANA KAVITHAI,NEHILCHI KONDEN
amayadi mahesh
migavum arumai குழந்தைகளின் சப்தம் கேட்டு
குதூகலிக்கும் சுவர்கள்

அவர்கள் வெளியூர் செல்ல
நேர்கிற போதேல்லாம்..
தன்னை
சமாதியாக உணருகின்றன..!

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.