எழுத நினைத்த கவிதை,
மை நிரப்பும் முன்
மறந்து போகும்
சாபத்திலிருந்து
விமோசனம் பெற,
ஒரு வேளைகூட
தவறாது
உறிஞ்சிக் கொண்டேயிருக்கிறது
பேனா
ஞாபக மறதி லேகியங்களை
உமிழ்ந்து கொண்டேயிருக்கிறது
உச்சாடனங்களை
காலம் கனிந்து
பந்து முனைகளில்
பிறக்க எத்தனிக்கையில்
உறைந்து நிற்கிறது
ஆதியும்
அந்தமும்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.