மீண்டும் ஒரு இனிய கனவை வீணடித்துவிட்டு
மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது...
தடித்து நீண்ட வினாடிகளாலான - இந்த இரவு-
ஒரு சர்வாதிகாரியின்  முறைப்போடு - அருகமர்ந்து
என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது...
என் முகவரிக்கு நீ அனுப்பிவைத்திருக்கும் மௌனம்-
எனக்கான பிரத்யேகங்கள் ஏதுமற்ற - உன்
அன்றாடங்களை  முடித்துக் கொண்டு
இன்றும்-நீ
உறங்கிப் போயிருக்கக் கூடும்....
ஒட்ட இயலாமல் உருண்டு கொண்டிருக்கும்
நீர்க்கோளத்தின்
தவிப்பையறியா தாமரை இலையைப்போல-
விழித்திருத்தலுக்கும் உறக்கத்திற்குமான இந்த
இடைவெளிகளின்
பரிமாணங்கள் முழுவதும்
எப்போதும்  இருந்து கொண்டேயிருக்கிறது...
உனக்கும் எனக்குமிடையே
எதுவுமே இல்லாத
ஏதோ ஒன்று-

Comments

5 comments

5
Ananthaprakash
kavithaiyil izhaiyodiyirukkum oru melliya isai
idhamaay irukirathu.

Vaarthaigalaaleye isaiyamaithirikum swathiku vaazhthukkal.
sudhakar
ethuvum illatha etho ondu endu ethuvm illai. etho ondru irukkirathu ungalukkulleye. neengal than athu ethu ena kandu pidikka vendum. athu ethuva irunthaalum, athu irukka vendiatha illaiya ena theermaanikka vendiyathu neengalthan. yenenil ungalukku mounathai anuppayathu veru yaarum alla neengalethan.
அன்புச்செல்வன்
Thozhi suwathikku... arumayaga vanthirukkirathu kavithai. thulliya paarvai. ,ir eak; Koodiya vaarthaigal. nandru. thodarattum...anbudan anbu.
Guest
தோழி ஸ்வாதிக்கு - உன் அளவிற்கு என்னால் தமிழ் எழுத முடியாது. கவிதை படித்தேன் மிக நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
Nehruji
kaathiruthal sugama? kaakavaipathil sugama?
aaruthal solvathu sulapam anupavithal kadinam
kasdankalai pen(eluthukol) valiyaga kavithiyaaka pathiyu saika.
anbudan Nehruji

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.