வெகு நாட்களுக்குப் பிந்தைய சந்திப்பிலும்  
வழக்கம் போலவே நினைவூட்டினேன் உனக்கு
எங்கள் வீட்டுப் புழக்கடையிலிருந்து 
உன் தாத்தா மலம் அள்ளிச்சென்றதாய்
என் தாத்தா சொன்னதை...
எங்கள் தெருவின் சாக்கடையை
உன் அப்பா சுத்தம் செய்ததை...
உன் சீருடையிலிருந்து
மலநாற்றம் வருவதாய்க்
கேலி செய்ததை...
வழக்கம் போலவே மௌனமாய் இருந்தாய்
வழக்கமான முறைத்த பார்வையுடன்
தற்போதைய நமது வேலை, தொழிலைப் பற்றி
கேட்டுக்கொள்ளவேயில்லை  
நீயும் நானும்
நானும் மறந்தும் கூட சொல்லவில்லை...
அந்தப் பெருநகரத்தின் 
அடுக்குமாடிக்   குடியிருப்பொன்றில்
இருக்கும் என் வீட்டின்
நான்கு கழிவறைகளையும் சுத்தம் செய்வது
நான்தான் என்பதை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.